நள்ளிரவை நெருங்கும் நேரம். டர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்ர்ர் ...... ப்ரிண்டேர் -இருந்து பேப்பர் வெளி வரும் சப்தம், ப்ரியா 'Security Module' டிசைன் -இல் செலுத்தி கொண்டிருந்த சிந்தனை-யை, அரவமில்லா அலுவலகத்தில் ப்ரிண்டேர் எப்படி ஆன் ஆனாது என்ற யோசனை,ஸ்தம்பிக்க செய்தது. கண நேர திகிலுக்கு பிறகு, சுதாரித்து, எதிரே உள்ள Cubicle-ஐ எட்டி பார்த்தாள். ஐந்து லோடு Homework முடித்து, ஐஸ்க்ரீம் பார்த்த குழந்தையை போல மெல்ல புன்னகைதான் அர்விந்த்.அர்விந்த் 'Handsome Smart Sensitive Intelligent' என்று அகில இளம் பெண்கள் ஏங்கும் இலக்கண குணங்கள் கொண்டவன். சிவந்த நிறம். அசப்பில் அசட்டு களை தவிர்த்த 'EveryBody loves Raymond' Ray போல் இருப்பான். திறமையான உழைப்பாளி. காலேஜ் முடித்து இரண்டு வருடம் தான் ஆனாலும், உரிய நேரத்தில் தன் வேலை மட்டும் முடிபதொடு அல்லாமல்,மற்ற டீம் மேம்பெர்ஸ் -உம் வேலை செய்ய வைப்பதில் கெட்டிக்காரன் .
ப்ரியா மாநிறம்.ஒரு average சௌத் இந்தியன் கேர்ள் லுக் கொண்டவள். கொஞ்சம் reserved டைப்.ஏழாம் கட்டத்தில் சனி இருப்பதால், பெரும்பாலான 'Eligible bachelor' களின் பெற்றோர்களால் நிராகரிக்க படுபவள்.ஆனால் சாப்ட்வேர் டிசைன் பண்ணுவதில் கில்லாடி.கவிதை படிப்பாள்.
இந்த வருட promotion லிஸ்ட்-இல் இடம் பிடிக்க அரவிந்தோடு நடக்கின்ற பனிபோரின் எண்ண அலைகள் , ப்ரியாவின் பதில் புன்னகைகின்ற நினைவை சிதற அடித்தது.இன்னும் சில நிமிடங்கள் தாண்டினால், டபுள் ஆட்டோ மீட்டர் சார்ஜ் ஆகும்,PG ஆன்ட்டி கத்துவாள் போன்ற உண்மைகள் உரைக்க, மின்னல் வேகத்தில் Monitor-ai ஆப் செய்து ,கைப்பை எடுத்து , கதவை நோக்கி செல்லல்ஆனாள். 'Do you need a lift?' என்ற அர்விந்தின் குரல் கேட்டதும் இடி வேகத்தில் செல்ல ஆரம்பித்தாள்.
அலுவலகத்தில் இருந்து ஆட்டோ ஸ்டாண்ட் வரை செல்லும் சமயத்தில் ,அவள் மனது செய்த புலம்பல் பின் வருமாறு." பைக் வெச்சு இருக்கான்... பின்சீட்-ல உக்காந்து போக பற்றா குறைக்கு ஒரு அழகான கேர்ள் friend வேற வெச்சுஇருக்கான்.பார்க்க வேற கொஞ்சம் நல்லா இருக்கான். எல்லாம் இருக்கு கடவுளே அவனுக்கு ...atleast இந்த வருஷ performance award ஆவது எனக்கு வர்ற மாதிரி அருள் செய்."
அலுவலகத்தில் ஆண்டு விழா . tequila- வும் Maragarita-வும் கிளாஸ்- களில் தளும்பி வழிய, மேனேஜர் இன் அபத்த ஜோக்ஸ்-களுக்கும் , புது joiner களின் அர்த்தமில்லா சிரிப்புகளுக்கும் நடுவே ,செவியை கூர் தீட்டி annoucer -இன் மேல் கவனத்தை பதித்தாள் ப்ரியா. 'The Award goes to..................... Arvind' என்ற வார்த்தைகள் கேட்டவுடன் கையில் இருந்த Margarita -vai ஒரே கல்பில் குடித்து முடித்தாள்.PG சென்று மற்ற Roomies -இன் இரவு அரவம் ஓய்ந்த பிறகு , பீறிட்டு அழுதாள்.அடுத்த நாள் அழுது விங்கிய கன்னத்தோடு ,மீட்டிங்-இல், அர்விந்த்-ஐ பார்த்து , 'Congratulations' என்றாள். தயக்கத்தோடு அவனும் 'தேங்க்ஸ்' என்றான். புது ப்ராஜெக்ட் Prototype - ஐ present செய்ய ஆரம்பித்தான்.ஏதோ ஏழு நாள் சிறை வைத்து மெகா சீரியல் பர்க்சா சொன்னது போல முகத்தை இறுக்கமாக வைத்து இருந்தாள் ப்ரியா. அர்விந்த் ப்ரேசன்ட் பண்ணி முடித்ததும், 'சிம்ப்லி கிரேட் I absolutely agree with Arvind design' என்பதை 'உலகம் உருண்டையானது' என்று சொன்ன கலிலெஒ-வின் seriousness-ஓடு சொன்னாள் சோனல்.அர்விந்த்-இன் unofficial girl friend. Exbition volcana-வில் phosporous போட்டது போல் பொங்கி எழுந்த ப்ரியா ,டிசைன்-இல் உள்ள கோளாறுகளை புட்டு புட்டு வைத்தாள். பிரமித்த மேனேஜர் ,'அர்விந்த் அண்ட் ப்ரியா ,இந்த ப்ராஜெக்ட் நாளைக்கு Client Visit அப்ப present பண்ணனும் . ரெண்டு பெரும் சேர்ந்து பண்ணி முடியுங்க...Project கிடைச்சா ரெண்டு பேரும் அமெரிக்கா flight ஏற வேண்டியது தான்'.
'Can you help me?' என்று தயக்கதோடு கேட்டான் அர்விந்த் ,கனவு தேசம் செல்லும் வாய்ப்பு கண்ணில் நிற்க, சரி என்றாள் ப்ரியா. இரவு 11 மணி.
Monitor -இல் தலைகொடு இருந்த அர்விந்த்-ஐ ப்ரியாவின் 'ஹுர்ரே' உலுக்கியது.
'என்னாச்சு'...
'இந்த Module-உம் முடிந்தது' . 'I think we are good for tommorow' .
எங்க காட்டு ...என்று ப்ரியாவின் Screen-ஐ பார்த்த அர்விந்த்...'யு ஆர் சிம்ப்லி கிரேட்' என்று சட்டு என்று ஒரு முத்தம் கொடுத்தான். முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் , விருட்டு என்று ஓட யத்தனித்தாள் ப்ரியா. அவளின் கையை இறுக பற்றி , கண் பார்த்து 'I have always loved u' என்றான் அர்விந்த்.
கன்னங்கள் சிவக்க சில நொடி தடுமாற்றத்திற்கு பிறகு ,
'அப்ப சோனல் ?' என்றாள் மெல்லிய காதல் நிரம்பிய சந்தேகத்துடன் ப்ரியா.
' ஒ ப்ளீஸ்.......' என்று புருவம் சுருக்கினான் அர்விந்த்.
'இருந்தாலும் நான் தான் promote ஆவேன் !!!!!!!' என்று கை விலக்கி, கத்தி கொண்டு வெட்கத்தோடு ஓடினாள் .
'அப்பிடியா... ' என்று அவள் பின்னால் ஓடி சென்று கட்டி கொண்டான்.